-ஹனீபா-
கல்முனை காரைதீவு பிரதான வீதியல் (18102.2013) காலை நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ;ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவு மக்கள் வங்கி முன்பாக இவ்விபத்து இடம்பெற்றது முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைக் கவசம் அணிந்திருந்ததால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்; அத்துடன் அவருடைய கால்முறிவடைந்த நிலையிலேயே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.
0 comments:
Post a Comment