
படத்தில் வரும் சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் நீக்க சம்மதித்துள்ள விடயங்களை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் மத்திய சபையிடமும் சமர்ப்பிக்கவுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழக முதல்வருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
படம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.தமிழக அரசு படத்தை வெளியிட விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து தாம் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்த கமல், அரசும் தடையை திரும்பப் பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளை கமல்ஹாசன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தையில் முழு திருப்தி கிடைத்துள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட முஸ்லீம் தரப்பினர் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment