VI :கொழும்பு மெனிங் சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவற்றை விற்பனைசெய்து வந்த சுமார் 8 கடைகள் மீது வழக்குத் தொடர கொழும்பு மாநகரசபை முடிவு செய்துள்ளது.
மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கையொன்றை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் முன்னெடுத்த போதே இவை இணங்காணப்பட்டுள்ளன.
மஞ்சள் தூளில் 'மெடனில்' எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் நிறப்பொடி கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிளகாய்த்தூளிலும் நிறத்தை பிரகாசமாகக் காட்டக்கூடிய, மனித பாவனைக்கு உதவாத இரசாயனம் கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது அங்குவிற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் அனைத்தும் மருத்துவ பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் போது அவதானமாக இருக்கும்படியும் அங்கீகாரம் பெற்ற உற்பத்திகளை வாங்குமாறும் கொழும்பு மாநகரசபையின் மருத்துவ பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment