இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/19/2013

பொதுபல சேனாவுக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்


VDI: நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும். முஸ்லிம்- பௌத்தர்களுக்கிடையில் உள்ள இனநல்லுறவை குலைத்து இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்ற பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான் ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.
இன்று காலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்திலிருந்து மீண்டு இன்று மிகவும் அமைதியாக இருக்கின்ற எமது இலங்கை திருநாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினையையும், இனக்கலவரத்தினையும் உண்டு பண்ணவும், ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,வேறுபல குற்றச்சாட்டுகளை பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன.
எனவே கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை வன்மையாக கண்டிப்பதோடு, ஏகமனதாக தீர்மானத்தினையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் பொது பல சேனா அமைப்பின் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கும் இச்சபையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பிரேரனையில் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா