சவுதிஅரேபிய இளவரசி மாடர்ன் உடையில் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இளவரசியின் குடும்ப உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதிஅரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத். 48 வயதான இவர் 5 குழந்தைகளின் தாயாகவும், அந்தநாட்டின் மனித உரிமைப் பிரச்சாரகராகவும் உள்ளார். தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது அதிர்ச்சி தரும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது. அவர் மாடர்ன் உடையில் இருந்தபடி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் தான் அது. இதை அவர் தனது தோழியின் மடிக் கனிணியில் பதிவு செய்து வைத்திருந்தார்.
அதை கனிணியில் புகுந்து தகவல்களைத் திருடும் நபர் ஒருவர் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்தார்.
ஏனெனில் சவுதிஅரேபிய கலாச்சாரத்துக்கு எதிராக அந்த புகைப்படம் இருந்தது தான் இதற்குக் காரணம். இந்தநிலையில், திடீரென அந்த புகைப்படத்தை குறித்த நபர் வெளியிட்டார். இதனால், இளவரசி பஸ்மாவுக்கும், அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment