இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/14/2013

கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு அபராதம்


TM:அம்பாறை, ஹிங்குராணை பிரதேசத்தில் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த இளைஞருக்கு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்கி 5,000 ரூபா அபராதம் விதித்துள்ளார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை ஹிங்குராணை நகர் பகுதியில் 23 வயது இளைஞரின் கையடக்க தொலைபேசியை பொலிசார் கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது கையடக்க தொலைபேசியில் ஆபாசப் படங்கள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்கி முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டார். இதன்போது நீதிபதி 5,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா