(ஹனீபா)
பொலிஸாருக்கம் பொதுமக்களுக்குமிடையில் சிறந்த அந்நியோன்ய பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தம் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சின் மூலம் அதன் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விஷேட வேலைத்திட்டமாக சிவில் பாதுகாப்பக் குழுவேலைத்திட்டம் இன்று காணப்படுகின்றது என அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.
மாலை (12.02.2013) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்திகாரி ஜயந்த தஹானக்க தலைமையில் நடைபெற்ற சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பொதுநல அமைப்பு பிரதி நிதிகள் ஆகியோருக்கான விஷேட கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் பணி இன்று பாராட்டத்தக்க ஒரு சேவையாக காணப்படுகின்றன பிரதேசங்கள் தோறும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நிறுவப்பட்டதன் பின்பு எல்லைதாண்டி காணப்பட்ட கொலை, கொள்ளை, சூது, விபச்சாரங்கள் பொன்ற பல்வேறு குற்றச் செயல்கள் குறைந்து காணப்படுகி;ன்றது.
பொதுவாக சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் பணி பொதுமக்களுக்கம் பொலிஸாருக்கும் இணைப்பப் பாலமாக செயற்பட்டு வருவதுடன் நல்ல பல பணிகளையும் செய்து வருகின்றனர் அதே போன்று எதிர் காலத்திலும் செயற்பட்டு குற்றச் செயல்கள் குறைந்த ஒரு சுதந்திர நாடாக எமது நாடு திகழ செய்ய வேண்டும் என்பதுடன் இவர்களின் பணிகளை முன்னெடுக்க பொதுமக்கள் இவர்களுக்கு உதவ செய்ய வேண்டும்; எனவும் தெரிவித்தார்.
இந்த சிவில் பாதுகாப்புக்குழுக்களின் பணிகளை முன்னெடுக்க சகல பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் எனவும் உதவிப் பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரட்ன, கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷட், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர், கெப்ஷோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment