டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர்
மீது டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நாளை மறுதினம் சாட்சியம் பதிவு செய்யப்படும். டெல்லியில் ஓடும் பஸ்சில் 6
பேர் கும்பலால் 23 வயது மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயம் அடைந்த மாணவி சிங்கப்பூர்
மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த பலாத்கார கொலை வழக்கில் 6 பேர் கைது
செய்யப்பட்டனர். அவர்களில் மைனர் ஒருவர் மீது மட்டும் சிறார்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பஸ் டிரைவர் ராம் சிங், அவரது
சகோதரர் முகேஷ், பழ வியாபாரி பவன், ஜிம் பயிற்சியாளர் வினய் சர்மா, பஸ்
கிளீனர் அக்ஷய் தாக்கூர் ஆகிய 5 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங் உள்ளிட்ட 5 குற்றவாளிகளும் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப்படுவதாக நீதிபதி யோகேஷ் கண்ணா அறிவித்தார். ஏற்கனவே குற்றப்பத்திரிகையில் உள்ள 13 பிரிவுகள் தவிர புதிதாக தவறான பாலியல் உறவுக்கு உட்படுத்துவதற்காக பெண்ணை கடத்திச் செல்லுதல் என்ற புதிய பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில்,கொல்லப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் 5 பேரும், அவர்களது மைனர் கூட்டாளியும் செயல்பட்டுள்ளனர். அந்த பெண்ணையும், அவரது நண்பரையும் ஏமாற்றி பஸ்சில் ஏற்றி உள்ளனர் என்றார். ஆனால், நாங்கள் நிரபராதிகள் என்று 5 பேரும் கூறினர். பின்னர், அவர்களை போலீசார் வேனில் திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இருந்தனர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வழக்கில் முறைப்படியான விசாரணை நாளை மறுதினம் முதல் நடக்கும் என்று நீதிபதி யோகேஷ் கண்ணா அறிவித்தார். அன்று, 3 சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

0 comments:
Post a Comment