இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/03/2013

கிருமிநாசினிகளின் தவறான பயன்பாடே சிறுநீரக நோய்க்கு காரணம்

TN:கிருமிநாசினிகளை கையாளும் முறையில் விவசாயிகளுக்குப் போதிய தெளிவில்லாததாலேயே நாட்டில் சிறுநீரக நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி இப் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிணங்க கிருமிநாசினி விற்பனை, உபயோகம், கொள்வனவு செய்தல் போன்றவற்றிற்கு முறையானதிட்டம் வகுக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தவும் வர்த்தமானியில் அதனை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற விவசாயிகளின் நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாட்டின் சில மாவட்டங்களில் நீரிழிவு நோய் பெரிதும் அதிகரித்துள்ளது. இதற்கு விவசாயிகளின் கவனயீனமே காரணம்.

கிருமிநாசினியை உபயோகித்துவிட்டு அந்தப் போத்தலை வயலில் ஒரு மூலையில் எறியும்போது அது நண்ணீரோடு கலத்தல், உபயோகத்தின் பின் கையை கழுவாமல் உணவு உட்கொள்ளல், புகைபிடித்தல் மக்கள் குளிக்கும் இடத்தில் கிருமிநாசினி கேன்கள் போத்தல்களை கழுவுதல் போன்ற அறியாமையான நடவடிக்கைகளே இப்பாதிப்புக்குக் காரணமாகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாய அமைப்புகளுக்கு இது விடயத்தில் சிறந்த தெளிவு ஏற்படுத்தவும் புதியசட்ட திட்டங்களை இது தொடர்பில் நடைமுறைப்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா