இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/25/2013

அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் தேசிய மகாநாடு

-ஹனீபா-
அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்; சங்கத்தின் 15வது தேசிய மகாநாடு நாளை (26) காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் சங்கத்தின் பிரதான செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டீ.ஜகத்குமார தலைமையில் நடைபெறவுள்ளது இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அதிதிகளான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ;மன்யாபா அபேவர்தன, பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சுசந்த புஞ்சிநிலமே, எஸ்.எம்.சந்திரசேன, இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துலதிலகசிறி உட்பட அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த தேசிய மகாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா