(ஹனீபா)
அண்மையில் வெளியிடப்பட்ட 2012 க.பொ.த.உஃதரப்பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 ஏ அதிசிறப்புச் சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்ற செல்வி தணிகாசலம் தர்ஷிக்கா தான் இளமையில் கல்வி கற்ற விபுலானந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) சிறுவர் அபிவிருத்தி நிலையக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இறைபணிச்செம்மல் ரீ.கயிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்ஷpக்காவின் பெற்றோர் உட்பட இயக்குனர் சபை உறுப்பினர்கள் பெரியோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துடன் வாழ்த்துரைகளும் வழங்கினர்.
இந்நிகழ்வில் தர்ஷிக்காவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்; வாழ்த்துப்பாமாலையும் வைத்தியர்கள் பாவிக்கின்ற ஸ்டெதஸ்கோப் ஒன்றும் ஞாபகச்சின்னமாக வழங்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய தர்ஷிக்கா தான் இந்நிலையை அடைவதற்கு அத்திவாரமாக இருந்து கல்வியை புகட்டிய பாலர் பாடசாலையையும் அதன் ஆசியர்களையும் வாழ்நாளில் என்றும் மறவேன் என்பதுடன் தனது எதிர்கால இலட்சியம் வைத்திய துறையில் சிறந்த இடத்தை பெற்று தான் பிறந்த மண்ணிற்கும் அதன் மக்களுக்கம் சேவையாற்றுவதே எனது இலக்கு எனவும் கூறினார்.

0 comments:
Post a Comment