(ஹனீபா)
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சினால் கிழக்கு மாகாணத்தைச் செர்ந்த 39 பேருக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கும் நிகழ்வு (15.02.2013) திருக்கோணமலையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நியமணம் கடந்த 2010 ஆண்டு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப்; பரீட்சையில் சித்தியடைந்த தமிழ், முஸ்லீம், சிங்களம் ஆகிய மூன்று இனங்களைச் சேர்ந்த 39 பேருக்கே இந்நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஆரியவதிகலப்பதி, மகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், பிரதிப் பிரதம செயலாளர் எம்.சீ.எம்.சரீப், அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜஹூபீர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment