நியூ ஓர்லியன்: உலகப் புகழ் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடிய முகமது அலி, 1984ம் ஆண்டு முதல் பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னரும் பல வருடங்களாக சுறுசுறுப்பாகவே இருந்து வந்தார். 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பலவீனமாகவே காணப்பட்டார். இந்த நிலையில் மிகவும் உடல் நிலை மோசமடைந்துள்ள முகமது அலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இவரது சகோதரர் ரஹ்மான் அலி கூறியுள்ளார். முகமது அலியால் பேசமுடியவில்லை என்றும், அவரால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதுள்ளதாகவும் கூறியுள்ள ரஹ்மான் அலி, அவர் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பதாகவும், அவர் உயிருடன் இருப்பது கடவுள் கையில் என்றும் கூறியுள்ளார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment