VI :பிரிட்டனில் முஸ்லீம் சிறைக் கைதிகளுக்கு பன்றி இறைச்சி கலந்த உணவு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மரபணு சோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சிறைகளுக்கு பன்றி இறைச்சி கலந்த கறி மற்றும் பெட்டீஸ் போன்ற உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.
இதனால் சிறைச்சாலைக்கு உணவுப் பொருள் வழங்கி வந்த ஒப்பந்தகாரர்களின் ஒப்பந்தத்தை பிரிட்டன் நீதியமைச்சு உடனடியாக இரத்துச் செய்ததுடன் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
அனைத்து சிறைச்சாலைகளும் உணவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு உணவு தர கட்டுப்பாட்டு நிலையத்திடம் அரசு கோரியுள்ளது.
இதனால் மனம் புண்பட்ட முஸ்லீம் கைதிகளிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இந்த தவறு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் ஜெர்மி ரைட் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment