-ஹனீபா-
சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்களினால் வைப்புச் செய்யப்பட்ட முதலீட்டுப் பணங்கள் சூரையாடப்பட்டதை கண்டித்தும் முதலீடு செய்யப்பட்ட பணங்களை மீளப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தைக் கோரியும் இன்று (22) சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியிலுள்ள ஜூம்மாப்பள்ளிவாசல் முன்பாக ஜூம்மாத் தொழுகையை தொடர்ந்த பாரிய ஆர்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்பாட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் செர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது இந்நிறுவனத்தை திறப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜம்யியதுல் உலமா இன்று மௌனமாய் இருப்பது ஏன், மோசடிக் காரர்களுக்க எதிராக நடவடிக்கை எடுத்து எங்களின் பணங்களை மீளப் பெற்றுத் தா, சிலிங்கோ புரொபிட் செயாரிங் முஸ்லீம்களின் 860 மில்லியன் பணத்தை மோசடி செய்தது ஏன், லலித் கொத்தலாவல அவர்களே எங்களது பணத்தை மீளக் கொடு, பிதி அமைச்சர் அவர்களே இப்பிரதேச மக்களின் 143 மில்லியன் ரூபாக்களையும் பெற்றுத் தாருங்கள், அரசே எங்களது பணங்களை மீளப் பெற்றுத் தர உதவுங்கள் என பல வாசகங்கள் அடங்கி இருந்தன.
0 comments:
Post a Comment