-ஹனீபா-
ஜனாதிபதி செயலகம் மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்பு செயற்பாட்டுப் பிரிவின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் ஏற்பாட்டில் தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் போதைப் பொருள் தடுப்பு பற்றி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை விழிப்பூட்டும் முழு நாள் செயலமர்வு இன்று (22) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்று வருகின்றது.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் போதைப் பொருள் அற்றதொரு ஆரோக்கியமான இலங்கை தேசத்தை கட்டியெழுப்பும் தூர நோக்குடன் ஊடகவியலாளர்களின் ஊடாக மக்களை விளிப்புணர்வடையச் செய்யும் இலக்குடன் இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறைப் பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்று வரும் இச் செயலமர்வில் ஜனாதிபதி செயலகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இணைப்பாளர் பண்டார, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பதிகாரி ஐ.அலியாh,; அம்பாறை மாவட்ட சிரேஷ;ட சுகாதார பரிசோதகரும் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகருமான எஸ்.தஸ்தகீர், மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் அதிகாரிகளான எஸ்.சுரேஷ;, கே.திணேஷ; உட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment