-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பிரிவுக்குட்டபட்ட பாடசாலை அதிபர்களுக்கான விஷேட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (02) ஆலையடிவேம்பு பிரதேச செயலக நவரட்னராஜா அரங்கில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.குணாலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விஷேட கலந்துரையாடல் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஆலையடி வேம்பு பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் சமமின்மை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆரயப்பட்டன.
0 comments:
Post a Comment