(ஹனீபா)
நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிக்குட்பட்ட சவளக்கடை பிரதேசத்தில் வசித்து வரும் கடந்த கால யுத்தத்தின் போது உயிர்நீத்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரின் குடும்பத்திற்கு இராணுவத்தின் 631ஆவது படைப்பிரிவு அதிகாரிகள் 6 இலட்சம் ரூபா நிதியில் வீடமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
இவ்வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று (21) 631ஆவது படைப்பிரிவின் அம்பாரை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேர்ணல் பிரியந்த லியனகே தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிராந்திய கட்டளைத் தளபதி பிறிகேடியர் ஹரீம் பெரேரா, சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எஸ்.பத்திரண ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கடந்த கால யுத்தத்தின் போது உயிர் நீத்த லயன் கோகுலனின் 05 பேரைக் கொண்ட குடும்பம் வறிய நிலையில் குடிசையில் வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டே இராணுவத்தினர் இவ்வீட்டினை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
இவ்வீட்டின் கட்டுமாணப் பணிகள் 631ஆவது படைப்பிரிவின் அம்பாரை மாவட்ட சிவில் பாதுகாப்பு கட்டளை அதிகாரி கேர்ணல் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலின் கீழ் அன்னமலை வேப்பையடி 15ஆம் கிராமத்திலுள்ள 631ஆவது படைப்பிரிவு அதிகாரிகளின் மேற்பார்வையுடன் இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment