(ஹனீபா)
இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடும் வகையில் சம்மாந்துறை சமூகம் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த மாபெரும் தேசிய தின நிகழ்வுகள் இன்று (04) சம்மாந்துறை ஹிஜ்றா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து சரீஆ கல்லூரி மாணவர்கள், பொருந் தொகையாக ஊர்பிரமுகர்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ,உலமாக்கள் ,கல்விமானகள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் சகிதம் ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தை வந்தடைந்தது.
சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளாருமான ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற இவ் வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், உதவித் தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.அப்தல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்மஹ்றூப், கெப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் காமில் இம்டாட் ,வை.என்.ரவல்ஸ் உரிமையாளர் யாஸ்தீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் ,உலமாக்கள் ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
சம்மாந்துறை நகர மண்டபத்தில் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் சுதந்திர தினத்தின் மகிமை தொடர்பாகவும் அதனை பெற்றுக் கொள்ள உழைத்தவர்கள் இவ்வைபவத்தின் போது நினைவும் கூறப்பட்டனர்.
மேலும் இந் நாட்டில் சகல சமுகங்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும்,புரிந்துணர்வுடனும் வாழவும் இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் இறைமைகளைகளையும் பாதுகாத்து மக்களை நிம்மதியாக வாழ வழி செய்த நாட்டின் ஜனாதிபதிக்கும் மற்றும் அரசியல் தலைமைகளுக்கும் ஆசி வேண்டி சாவ மத பிராத்தனைகளும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment