இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/07/2013

பழுகாமத்தில்,15 வயது சிறுமியை வல்லுறவு செய்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

AD :மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குடும்பஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பழுகாமம் முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 25வயதுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் கே.கருணாகரன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

பழுகாமத்தில் உள்ள 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் கணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தெரிவித்தார்.

இன்று (07) காலை இருவரும் ஒன்றாக இருப்பதைக்கண்டு குறித்த சிறுமியின் தாயார் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.

சுயவிரும்பின் பேரிலேயே இவரும் குற்றம்புரிந்துள்ள நிலையிலும் குறித்த சிறுமி 15 வயதை உடையதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தெரிவித்தார்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா