இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/07/2013

வெனிசுவெலாவின் புரட்சித் தலைவர் ஹூகோ சாவேஸின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த கவலை

AD:வெனிசுவெலாவின் புரட்சித் தலைவர் ஹூகோ சாவேஸின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

வெனிசுவெலாவின் பதில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவிற்கு ஜனாதிபதி தனது அஞ்சலி செய்தியை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெனிசுவெலாவின் முன்னேற்றத்திற்கு அபிவிருத்திக்கும் சாவேஸ் பெரும் பங்காற்றியுள்ளதாக ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹூகோ சாவேஸ் இலங்கையின் சிறந்த நண்பர் எனவும் இலங்கையுடன் வெளிநாட்டு உறவுகளை பேண அவர் அதிக ஆர்வம் காட்டியதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சாவேஸின் மறைவையடுத்து வெனிசுவெலா மக்கள் சோகத்தில் உள்ள நிலையில் இலங்கை மக்களும் அவர்களின் சோகத்தை பகிர்ந்து கொள்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா