TL: சட்டவிரோதமான முறையில் மாடுகளை விநியோகிக்க முயற்சி செய்வதாகவும், கன்றுக்
குட்டிகளை இறைச்சிக்காகப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி கொழும்பு
தெமட்டகொடையிலுள்ள மாட்டிறைச்சி பரிசோதனை மனையினை முற்றுகையிட்டு
பொதுபலசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து பொதுபலசேனா அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தினால் மாட்டிறைச்சி விற்பனையாளர்களின் பணிகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளுக்கான மாட்டிறைச்சி விநியோகமும் தடைப் பட்டதாக கொழும்பு மாட்டிறைச்சி விநியோகஸ்தர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாட்டிறைச்சி விநியோகஸ்தர் சங்க உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள மாட்டிறைச்சி பரிசோதனை மனைக்கு வந்த பொதுபலசேனா அமைப்பினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தியோகத்தர்களிடம் தெமடகொடை மாட்டிறைச்சி பரிசோதனை மனைக்கு கொண்டுவரப்படும் பெரும்பாலான இறைச்சிகள் சட்டவிரோதமான முறையில் விநியோகிக்கப்படுவதாகவும் கன்றுக் குட்டிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மாட்டிறைச்சியினை குறித்த கட்டிடத்துக்குள் கொண்டு வருவதற்கான அனுமதியினைக் காண்பிக்குமாறு அச்சுறுத்தினர்.
அதேவேளை தெமட்டகொடை மாட்டிறைச்சி பரிசோதனை மனை வாசற்கதவினை மூடிவிட்டு கட்டிடத்தின் உட்பகுதியில் நின்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாது, மாட்டிறைச்சி விநியோகஸ்தர்கள் மாட்டிறைச்சியை விநியோக நடவடிக்கைகளுக்காக கொண்டு செல்லவும் பொது பலசேனா அமைப்பினர் அனுமதிக்கவில்லை.
சாதாரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் மாட்டிறைச்சி விநியோகஸ்தர்களின் நடவடிக்கை தடைப்பட்டதால் கொழும்பு மற்றும் கொழும்பு நகரை அண்டிய சில பகுதிகளுக்கு மாட்டிறைச்சியினை விநியோகிக்க முடியாமல் போனது. காலை 10 மணியளவில் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் பொது பலசேனா அமைப்பினரைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்திய போது அவர்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லாமல் விநியோகஸ்தர்களின் அனுமதிகளையும் பறித்து வைத்துக்கொண்டனர்.
தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள மாட்டிறைச்சி பரிசோதனை நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் இறைச்சிகள் மிருக வைத்தியர்களாலும் சுகாதார பரிசோதர்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பொதுபலசேனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்க முடியாது. பொதுபலசேனா அமைப்பினரின் அராஜகமான நடவடிக்கையினால் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் முஸ்லிம் விநியோகஸ்தர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் ஆனந்த தேரர் தெரிவிக்கையில்; கடந்த வியாழக்கிழமை எம்மிடம் வந்த முஸ்லிம் மதத்தவரொருவர் தெமட்டகொடை மாட்டிறைச்சி பரிசோதனை மனையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும், கன்றுக்குட்டிகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு இவ்விடத்துக்குக் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நபர் வழங்கிய தகவலையடுத்து பொதுபலசேனா அமைப்பிலிருந்து சில பிக்குமார்கள் அப்பகுதி பொலிஸாருடன் சென்று பார்வையிட்டனர்.
இந்நாட்டில் சட்டவிரோதமாக மாடுகளை வெட்டவும் கன்றுக்குட்டிகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில முஸ்லிம் விநியோகஸ்தர்கள் அதிக இலாபத்துக்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றுக் காலை 6 மணியளவில் நாம் அப்பகுதிக்கு விரைந்து பரிசோதனை நடவடிக்கைகளை அவதானித்தோம். அவர்களின் விநியோக நடவடிக்கைகளுக்கு நாம் எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை. பொதுபலசேனா அமைப்பினர் விநியோக நடவடிக்கைகளுக்குத் தடையாக இருந்ததாகக் கூறுவது பொய்.
சந்தேகத்துக்கு இடமான சில வாகனங்களையும் மாட்டிறைச்சிகளையும் பரிசோதனை செய்யுமாறு அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டோம். அத்துடன், முஸ்லிம் விநியோகஸ்தர்களின் மத நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் நாம் ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை என்றார்.

0 comments:
Post a Comment