இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

ஹலால் சான்றிதழ் வழங்குவது ஹராம் - முஸம்மில்

ஹலால் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையாகும். அதற்கு சான்றிதழ் வழங்குவது ஹராம் ஆகும். பண்டைய காலம் தொடக்கம் முஸ்லிம்கள் ஹலால் முறையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட அடிப்படைவாத சபைகள் ஹலாலை உணவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி அதற்கு சான்றிதழ் வழங்கி வியாபார நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது என அமைச்சர் விமல் வீரவன்சவின் சகாவும், முன்னாள் ஜே.வி.பி. எம்.பி.யுமான முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் அறிவிப்பை குறிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது சகல இன மக்களும் தமக்கேற்ற உணவை பெற்றுக்கொள்ளமுடீயும். வெறுமனே ஹலால் சான்றிதழை வழங்குவது முட்டாள்தனமாகும்.

பன்றி எண்ணை தவிர்ந்த பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படட்டுள்ளது. இதற்கான ஆதாரம் எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் இடமளிக்கமுடியாது. இதுவரை ஹலால் சான்றிதழ் வியாபார இலாபத்திற்காகவும், இன பிளவுக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டது எனவும் சர்சசைக்குரிய முஸ்ம்மில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா