இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

பிரதமர் பதவிக்க நானே பொருத்தம்-மேர்வின் சில்வா

TL: பிரதமர் பதவிக்கு தானே மிகவும் பொருத்தமானவர் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.  நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேர்வின் சில்வா இதனைத் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான வேட்பாளராக தான் இருப்பதாக அவர் கூறுகிறார்.

சுதந்திரக் கட்சியில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு என்னிலும் பார்க்க வேறு பொருத்தமானவர்கள் இல்லை.  எனது சகோதரி, சகோதரன், சகோதரியின் கணவர் கொல்லப்பட்டனர். நானும் காயமடைந்தேன். சிறைவைக்கப்பட்டிருந்தேன். பெலியத்தையிலுள்ள எனது குடும்ப வீடு அழிக்கப்பட்டது. ராஜபக்ஷக்களுடன் எனது அரசியலை செய்துள்ளேன்.

ஜனாதிபதியின் மிக நம்பிக்கையுள்ள ஆளாக நான் இருக்கிறேன். ஆதலால் அதனை (பிரதமர் பதவி) எனக்கு வழங்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா