பொத்துவில் அறுகம்பை கடலில் குளித் துக்கொண்டிருந்த வெளி நாட்டவரொருவர்
சனிக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென பொத்துவில் பொலிஸார்
தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்காக இலங்கை வந்து பொத்துவில் அறுகம்பையிலுள்ள உல்லாச
விடுதியில் தங்கியிருந்த நிலையில் சம்பவதினமான மாலை 5.30 மணியளவில்
அறுகம்பை கடலில் நீராடிய போது கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தபர் யூஸ் (53 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தபர் யூஸ் (53 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு கொழும்பிற்கு அனுப்பிவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment