இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/10/2013

முஸ்லிம்களுக்கு எதிராக துண்டு துண்டாக மாறும் பிரசுரம்

கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன்கிழக்கிஸ்தான்என முஸ்லிம் மாகாணமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு துணைபோகும் வகையில் தமிழர்கள் கட்டிடங்களை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டாம் என மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன.

திராவிடன் சேனை என்றஅமைப்பின் பேரிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுவருகின்றன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதல் கட்டம் கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றுவது.

இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழர் தாயகபூமியை கையகப்படுத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வியாபார நிலையங்களை விலையாகவும் குத்தகைக்கும்பெற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகப்பகுதிகளில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளை உடன் வெளியேற்றுமாறு எமது அமைப்பு எச்சரிக்கின்றது.

அத்துடன் இந்த துரோகத்தனத்துக்கு துணைபோகும் தமிழ் கட்டிட உரிமையாளர்களே உங்கள் சொத்தை அழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா