இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2013

கிழக்கில் மழை அறுவடை பாதிப்பு (படங்கள்)

(சியாட்)
கடந்த மூன்று தினங்களாக கிழக்கு மாகனத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால் நடைபெற்று வரும் நெல் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக நெல் அறுவடைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதைய மழையானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதேவேளை, வடிகான்களும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதால் வீதிகளில் வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளன. மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(இப்படங்கள் சம்மாந்துறை கல்முனை காத்தான்குடி போன்ற பகுதிகளில் பிடிக்கப்பட்டவை)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா