(ஹனிபா)
நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு பலதுறைகளையம் அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி அவர்கள் மிகவும் கூடுதலான பணங்களை ஒதக்கீடு செய்துள்ளார் விஷேடமாக விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றில் பதிய திருப்புமுனையையும் எற்படுத்தும் வகையிலும் கூடுதலான நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளார் என விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபெவர்த்தன இன்ற (26) தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு பலதுறைகளையம் அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி அவர்கள் மிகவும் கூடுதலான பணங்களை ஒதக்கீடு செய்துள்ளார் விஷேடமாக விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றில் பதிய திருப்புமுனையையும் எற்படுத்தும் வகையிலும் கூடுதலான நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளார் என விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபெவர்த்தன இன்ற (26) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்தறைப் பிரதெசத்தில் 110 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பத்தலகொட நெல் அராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி நிமால் தயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இங்கு வருகைதந்த அமைச்சர்களான தயரத்னா மற்றும் அதாஉல்லா ஆகியோரின் வெண்டுகோளுக்கு அமைவாக முதலில் நான் இந்த சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை இந்தப் பிரதேசத்தில் நீண்டகாலம் அரசியல் தலைவராக இருந்து மரணித்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜிட் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய ஞாபகாத்தமாக இந்நிலையம் அப்துல் மஜீட் நெல் ஆராய்ச்சி நிலையம் என பிரகடனப் படுத்துகின்றேன்.
இந்தப் பிரதேசம் நாட்டின் நெல் உற்பத்தியில் 20 வீதமான நெல்லை உற்பத்தி செய்கின்றது எனவே இந்த நிலையம் இப்பிரதேத்தக்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதியே கடந்த 2001ம் ஆண்டு தற்காலிகமாக தொழில் நுட்பக் கல்லூரியில் ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்தது இந்த நிலையில் 2009-2010ம் ஆண்டுக்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட 810 மில்லியன் ரூபாவில் சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி நிலையம் அமைப்புக்காக 110 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து இக்கட்டிடம் அமைக்கப்பட்டு அதனை இன்று திறந்து வைப்பதில் பெருமையடைகின்றேன்.
இது இந்தப் பிராந்திய மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் அத்துடன் இப்பிரதேசத்தில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் இருப்பதனால் பல புதிய கண்டு பிடிப்புக்களையும் ஆராய்ச்சிகளையும் நிகழ்த்துவதற்கு பெரும் பங்காற்றும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் அதாஉல்லா கூறியதைப் போன்று காலாகாலமாக விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி தமது தொழிலில் நஷ;டங்களை அனுபவித்து வருவதை நான் நன்கு அறிவேன் இதனை மாற்றியமைப்பதற்காகவே ஜனாதிபதி அவர்கள் புதிய ஆலேசனைகளை முன் வெத்துள்ளதுடன் கூடுதலான நிதிகளையும் ஒதுக்கி வருகின்றார்.
இந்த ஆராய்ச்சி நிலையம் இப்பிராந்தியத்தில் ஒரு முன்மாதிரியான நிலையமாக செயற்பட்டு இப்பிராந்தியத்தில் செய்கை பண்ணப்படும் விவசாயப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதற்காக நல்ல திட்டமிடல்ககளை மேற்கொள்ள அதற்கு தேவையான ஆராய்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் விவசாயிகள் அதிக இலாபத்தை அடைந்து கொள்ளும் வகையில் இரண்டு விவசாய போகங்களுக்கம் இடையில் பாசிப் பயறு உற்பத்தியினை மேற்கொள்வதனால் கூடுதலான இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் .
இவ்வாறான நடைமுறையினை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தி கடந்த வருடம் 08 ஆயிரம் மெற்றிக் தொண் அறுவடை கிடைத்துள்ளது.
இதனை இங்கு மேற் கொள்ள முடியுமாயின் அதற்கான விதைகளை இலவசமாக நாங்கள் வழங்கவுள்ளோம் எனவும் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூறினார்.
இவ்வைபவத்தில் சிரெஷ;ட அமைச்சர் பி.தயாரத்னா, மாகாண சபைகள் உள்ளராட்சி அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா, மாகாண சபை உறப்பினர் எம்.எல்.எ.அமிர், தவிசாளர் எ.எம்.எம்.நௌஷாட், அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சாகல ச10ரிய, விவசாய பணிப்பாளர் நாயகம் கெ.ஜி.சிறியாபால, பிரதெச செயலாளர் எ.மன்சூர், தென்கிழக்கப் பல்கலைக் கழகத்தின் உப வெந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், நிலைய பொறுப்பதிகாரி வை.பி.இக்பால் உட்பட உயரதிகாரிகள் பலரம் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment