(ஹனீபா)
கலை மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகளினூடாக இனங்களிடையே இன உறவையும் ஒற்றுமையையும் ஏற்படத்த முடியும் அது நீண்டகால இன சௌஷன்யத்துக்கும் வழிவகுக்கும் என கலை மற்றும் கலாசார அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க (25.03.2013) மாலை தெரிவித்தார்.
கலை மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகளினூடாக இனங்களிடையே இன உறவையும் ஒற்றுமையையும் ஏற்படத்த முடியும் அது நீண்டகால இன சௌஷன்யத்துக்கும் வழிவகுக்கும் என கலை மற்றும் கலாசார அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க (25.03.2013) மாலை தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அவர்களின் முயற்சியினால் கலை மற்றும் கலாசார அமைச்சின் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட மத்திய கலாசார நிலையக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு; உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த கால யுத்தம் காரணமாக இனங்களிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து இன்று இந்த இடத்திலே நடைபெறுகின்ற இந்த திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் சகல இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஷ;தவ ஆராதனைகளுடன் நடைபெற்றதை நினைக்கின்ற போது மிகவும் சந்தேசமடைகின்றேன்.
எனவேதான் கலை கலாசார நிகழ்வுகளினூடாக இன உறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் அதற்கு முன்னுதாரணமே இன்றைய நிகழ்வுகளாகும்.
நாட்டில் கலை கலாசார பாரம்பரியங்களையும், இன உறவையும் வளர்க்கும் நோக்குடன் ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 160 கலாசார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கலாசார நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
மேலும் பல கலாசார மத்திய நிலையங்கள் இந்த மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது அதில் எமது பாராளுமன்ற உறப்பினர் பியசேன அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக நாவிதன் வெளி, ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் மேலும் புதிய கலாசார நிலையங்களை ஆரம்பிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப வேலை எதிவரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கலை மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்கா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் ரீ.நவரெட்னராஜா, ஜனாதிபதி இணைப்பாளர் கே.புஷ;பகுமார்(இணியபாரதி), உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment