இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/14/2013

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல் 02ஆம் மற்றும் 03ஆம் வருட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமக்கு இதுவரை வழங்கி வந்த விடுதி வசதிகளை பல்கலைக்கழக நிருவாகம் ரத்துச் செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தினைக் கண்டித்தும் தொடர்ந்தும் தமக்கான விடுதி வசதிகளை வழங்குமாறு கோரியுமே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 02ஆம், 03ஆம் வருடங்களில் கல்வி கற்று வரும் சுமார் 800 மாணவர்கள் இதனால் விடுதி வசதிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே – தற்போது கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா