நடிகை குஷ்பு மீது ஏக வசனத்தில் திட்டிய மாநில தி.மு.க. மகளிர் தொண்டர்
அணி அமைப்பாளர் காரஸ்மாக்ஸை தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்றில் தி.மு.க. ஆதரவு நடிகையான குஷ்பு
தி.மு.க.வுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவது குறித்து கேள்வி
ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்தார். இது தி.மு.க.வில் சலசலப்பை
ஏற்படுத்தியது.
குஷ்பு திருச்சியில் தி.மு.க. எம்.பி திருச்சி சிவா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு பெமினா ஓட்டலுக்கு திரும்பினார்.
அப்பொழுது அங்கிருந்த தி.மு.க.வினர் சிலர் குஷ்பு ஓட்டலுக்கு வந்த கார் மீது செருப்புகளை வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை குஷ்பு தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை செல்ல கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார்.
அங்கும் சிலர் குஷ்புவை கண்டித்து கோஷமிட்டு செருப்பு வீசினர். பின்பு அவர் விமானம் ஏறி சென்னை சென்றுவிட்டார். மேலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் கல்வீச்சு நடத்தப்பட்டது.

0 comments:
Post a Comment