இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/14/2013

பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு நிதி வழங்கல் நிகழ்வு

தயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திட்குட்பட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திற்கு நிதி வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.வஸீர், ஏ.எம்.நிஸார்டீன், காரைதீவு பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மறைந்த வெனிசுலா ஜனாதிபதி சாவோஸ் நினைவு கூறப்பட்டு இரங்கல் உரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் நிகழ்த்தப்பட்டது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா