இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/06/2013

பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வு Photos

(ஹனீபா)
நீதிமன்றங்களின் கட்டளைகளுக்கு அமைவாக சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைக்கான கொடுப்பணவுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (06.3.2013) சம்மாந்துறையிலுள்ள சிறுவர் நன்னடத்தை அலகுக் காரியாலயத்தில் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ;ட மாவட்ட நன்னடத்தை அதிகாரி எ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய சிறுவர் பராமரிப்ப துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளான வை.பி.லாபீர், ஆர்.விஜிதரன்,எஸ்.சிவகுமார்,ரீ.வினோதினி, ஏ.தஸ்லீமா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 132 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இக் காசோலைகள் வழங்கப்பட்டன மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் பலமாதங்களை ஒன்றினைத்ததாக இக்காசோலைகள் இன்று அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா