இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/23/2013

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம் photos

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்கி வருகின்ற பிரச்சினைகள் மற்றும் 2013 சிறு போக வேளாமை மேற் கொள்ளப்படும் கால அட்டவனையை தீர்மானித்தல், நீர்முகாமைத்துவம்  போன்ற பல்வேறு விடயங்களைத் தீர்மானிக்கும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம் (21.3.2013) சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட செயலாளரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாக்கலை அணைக்கட்டிலிருந்து கிடைக்கின்ற ஆற்றுப் பாச்சல் மற்றும் வாய்க்கால் பாய்ச்சல்களிலிருந்து நீரினைப் பெற்றுக் கொள்ளும் நீர்ப்பாசன திணைக்களத்தின் சம்மாந்துறைப் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவிலுள்ள மோறாவில் -01,02; , புளக் N;ஜ, பட்டம்பிட்டி போன்ற பிரிவுகளும் கல்முனைப்; பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கரைவாகுக் கண்டம் அதாவது குருணல் கஞ்சி பிரவு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவிலுள்ள வீரையடி நீர்ப்பாச்சல் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் செல்வி எம்.எஸ்.றிப்னாஸ், கல்முனை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் திரு திலகராஜா, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.இப்றாஹீம் , பொறியியல் உதவியாளர்களான திரு சிவநாதன், மஹ்றூப் ஆதம் உட்பட பொரும்பாக உத்தியோகத்தர்கள், கமநல சேவை அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்டவிதானைகள், போடிமார்கள் என பெருந் தெகையினர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகளால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன அதாவது காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் விவசாயிகளின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மனித உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையினால் ஒவ்வொரு வேளாமைப் போகத்திலும் பலருடைய உயிர்கள் யானைகளால் பறிக்கப்பட்டு வருகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டள்ளது.

ஏந்தவொரு காலத்திலுமில்லாத வகையில் தற்போது ஏராளமான காட்டு யானைகள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது  இவை போதாது என்று பிற மாவட்டங்களிலிருந்தும் திருட்டுத்தனமா முறையில் இங்கு யானைகளைக் கொண்டு வந்து விட்டுச் செல்வதையும் அறிந்துள்ளதாகவும்  விவசாயிகளால் குற்றம் சுமத்தப்பட்டன.

சில பிரதேசங்களில் யானை வேலிகள் இன்னும்  போடப்படாமல் காணப்படுவதாகவம் தெரிவிக்கப்பட்டன இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக தற்போது நடைபெறவள்ள தெயட்ட கிருள கண்காட்சி நிறைவடைந்ததன் பின்னர் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலாளரை சந்தித்து காட்டு யானைகளை இங்கிருந்து விரட்டுவதற்கான நடவடிக்கை மேற் கொள்வது எனவும் இதுவரைக்கும் போடப்படாதுள்ள யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விவசாய நீர் முகாமைத்தவக் கூட்டத்துக்கு அமைவாக சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுகளுக்கட்பட்ட சம்மாந்துறை பிரிவிலுள்ள புளக் ஜே பாச்சல் பிரிவுக்குறிய விவசாயிகள் 2013 மார்ச் மாதம் 25ம் திகதியிலிருந்தும், ஏனைய அனைத்து பாச்சல் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளும் 2013 ஏப்ரல் மாதம் 01ம் திகதியிலிருந்து விவசாய ஆரம்ப வேலைகளை மேற் கொள்ளுமாறும் ஆரம்பத்திகதியிலிருந்த ஒருமாதகாலத்துக்குள் தமது விவசாய விதைப்பு வெலைகளை பூர்த்தி செய்யுமாறும் அதற்கமைவாகவே நிர் முகாமை செய்யப்படும் எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா