இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/23/2013

சம்மாந்துறை (சிலியற்) உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்திற்க்கு றவூப் ஹக்கீம் விஜயம் Photos

-ஹனீபா
உயர் கல்வி அமைச்சின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் (சிலியற்) மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் முகமாக நீதி அமைச்சரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் இன்று (23) அக்கல்வி நிறுவனத்துக்கு விஜயம் செய்தார்.

இந்கல்வி நிலையம்  சமகாலத்தில் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நிலையப் பொறுப்பிகாரி மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோரினால்; அமைச்சரின் கவனத்துக்கு கொணடு வந்தனர்.

இந்த சிலியற் கல்வி நிலையம் 1996ம் ஆண்டு ஆரம்பிக்கட்ட சுமார் 17 வருடங்கள் கழிந்துள்ளது இக்கல்வி நிலையத்திலிருந்த பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் உயர் பட்டங்களைப் பெற்று வெளியாகயுள்ளனர்.

ஆனால் இக்கல்வி நிறுவனத்தக்கு  ஒருநிரந்தரக் கட்டிடம் இன்மையால் வாடகைக் கட்டிடங்களில் பட இடங்களில் மாறி மாறி தமது கல்வி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதனால் மாணவர்களும் விரிவரையாளர்களும் பல்வேறு அசௌகரிகங்களை எதிர் நோக்கி வருவதாகவம் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன் தற்போது இயங்கி வருகின்ற இக்கட்டிடம் கூட சம்மாந்துறை பென்ஷனியர் சங்கத்துக்குரியதாகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயங்களை கவனத்திற் கொண்ட அமைச்சர் றவூப் ஹக்கீம் சம்மாந்துறைப் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது விடயமாக கலந்துரையாடினார் இக்கல்வி நிறுவனம் அமைப்பதற்காக இவர்களின் வேண்டு கோளுக்க அமைவாக ஆரம்பத்தில் 80 பேர்சஸ் நிலம் வழங்கியதாகவும்  அவை இக்கல்வி நிலைய அமைப்பக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக தற்போது ஒரு ஏக்கர் நிலத்தை துரிதமாக வழங்குவதாக பிரதேச செயலாளர் அமைச்சரிடம் இன்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இங்கு வருகை தந்திருந்த சிலியற் நிருவனத்தின் பணிப்பாளர் நாகயம் ஹிலாரி சில்வா வுக்கும் அமைச்சரக்குமிடையிலான பேச்சுவார்த்தையினை அடுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரந்தரக் கட்டிடத்தினை நவீன முறையில் அமைப்பதற்குரிய துரித நடவடிக்கையினை மேற் கொள்வதாக பணிப்பாளர் நாயகம் அமைச்சரிடம் உறுதி வழங்கினார்.

இதுவரையில் இக்கட்டடிடம் அமைக்கப்படாமைக்கான காரணம் பொதியளவு நிலம் கிடைக்காமையே எனவும் அது இன்று கிடைக்கப்பெற்றிருப்பதால் துரிதமாக அதனை முன்னெடுக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி சில்வா தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பொது அமைச்சர் றவூப் ஹக்கீம், பணிப்பாளர் நாயகம் ஹிலாரி சில்வா, சவூதி அரேபிய தூதரக பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹீர், அமைச்சரின் ஊடக பணிப்பாளர் ஹபீஸ், அமைச்சரின் இணைப்பதிகாரியும், கல்முனை பிரதேச அமைப்பாளருமான றஹ்மத் மன்சூர், சம்மாந்தறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.எம்;;.இப்றாஹீம், அக்கரைப்பற்று மாநகர எதிர்கட்சி தலைவர் ஹனீபா மதனி, நிலைய பொறுப்பதிகாரி அப்தல் றஹ்மான், சிரேஷ;ட விரிவுரையாளர் எஸ்.எல்.முஸ்தபா உட்பட பலர் கலந்த கொண்டனர். 

1 comments:

  • straight path says:
    March 24, 2013 at 9:57 PM

    don't allow to this people's in ur area.
    There are political toys

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா