மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த
அழகேஸ்வரன் அகிலேசன் (வயது 04) என்ற சிறுவனே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளான்.
இந்தச் சிறுவனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திறப்பு இருந்த நிலையில் மற்றுமொரு சிறுவன் லொறியை இயக்கி அதனைச் செலுத்த முற்பட்டபோது அந்த லொறி நகர்ந்து சென்று 4வயதுச் சிறுவனை வீட்டு மதிலுடன் மோதியதில் அவன் உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் ஞாயிறு இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 16 வயதுச் சிறுவனைக் கைது செய்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment