
வியாழன் சுற்றுப்பாதையை அண்மித்திருக்கும் சி/2012 எஸ்.ஐ. (ஐசொன்) என்ற வால் நட்சத்திரத்தையே ஹப்ல் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. எனினும் இந்த தொலைநோக்கி சூரியனிலிருந்து 386 மில்லியன் மைல் தொலைவிலும் பூலியிலிருந்து 394 மைல் தொலைவிலும் உள்ளது.
இந்த வால் நட்சத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் சூரியனை அண்மிக்கவுள்ளது. இதன்போது இந்த வால் நட்சத்திரம் வெள்ளிக் கிரகத்தை அல்லது முழு நிலவை விட பிரகாசமாக பூமிக்கு தென்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஐசொன் வால் நட்சத்திரம் ஏனைய வால் நட்சத்திரங்களை போன்று தூசி கலந்த உறைந்த வாயுக்களால் அமைந்த ஒரு அழுக்கு பனிப்பந்தாகும். இது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. ஐசொன் வால்நட்சத்திரம் எதிர்வரும் நவம்பர் 28ம் திகதி சூரியனிலிருந்து 700,000 மைல் தொலைவில் நெருங்குவதால் பூமிக்கு பிரகாசமாக தென்படும்.
Bas TN
0 comments:
Post a Comment