சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில்
இம்முறை க.பொ.த சா. தரத்தில் 9 ஏ எடுத்து சித்திபெற்ற மாணவி வி.எப்.
சுமானியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கள் கிழமை பாடசாலை
காலைக்கூட்டத்தில் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு யஹ்யாகான் வாக்குறுதியளித்தபடி
இம்முறை மாணவி க.பொ.த சா. தரத்தில் 9 ஏ எடுத்து சித்திபெற்ற மாணவி வி.எப்.
சுமானிக்கு 2 வருட உயர்கல்விக்கான பணப்பரிசினை வழங்கிவைத்ததுடன், மாணவியால்
பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர், அதிபருக்கும் பரிசில்களும் வழங்கி
வைக்கப்பட்டது.
மேலும் சென்ற
வருடம் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9 ஏ சித்திபெற்று வரலாறு படைத்த
மாணவிக்கு ஏ.சீ.யஹ்யாகான் வாக்குறுதியளித்த பணப்பரினையும் வழங்கிவைத்தார்.
அத்துடன் பாடசாலைக்கு மிக நீண்டகாலத் தேவையாக இருந்த போட்டோ கொப்பி
இயந்திரம் ஒன்றும் யஹ்யாகானால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று
எதிர்காலத்தில் 9ஏ சித்தி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 50 ஆயிரம்
ரூபாய்கள் வழங்க உள்ளதாக அவர் வாக்குறுதியளித்தார்.








0 comments:
Post a Comment