இம் முறை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மேதினக் கூட்டங்கள் மூன்று பிரதான நகரங்களில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான கயந்த கருணதிலக தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம் முறை பொது எதிரணியின் மேதினக் கூட்டம் குருணாகலில் இடம்பெறவுள்ளதுடன் இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.வின் தொழிற்சங்கங்கள் பிரதான மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி மற்றும் லக்வனிதா பிரிவினர் இணைந்து பதுளை மாநகரில் பிரதான மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
Bas VI
0 comments:
Post a Comment