இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/22/2013

இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல.. -மதியன்பன் -

(இந்த கவிதை ஒரு வாசகரால் அனுப்பப்பட்டது. இதற்க்கும் எமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சம்மாந்துறை வெப்)

அனுப்பியவர்-சாலி மஜீட்

இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல.. 
-மதியன்பன் -

கல்முனை கடற்கரைப் பள்ளி – அதன்
கன்றாவித் தனங்களைச் சொல்லி
கவிதைகள் பாடுவேன் புள்ள – நீயும்
காதினை நீட்டுவாய் மெல்ல..

கடற்கரை ஓரத்தில் கபுறு – அதைக்
காப்பாத்த சுற்றித்தான் சுவரு..
கண்னெட்டா தூரத்தில் மினரா – அதில்
கட்டுவார் கொடிகளை திமிறா..

பாவாக்கள் என்றொரு கூட்டம் - அங்கே
பக்தியில் போடுகிறார் ஆட்டம் 
பச்சையால் போர்த்திய ஆடை – அவர்
பாடினால் கஞ்சாவின் வாடை..

திருவிழா போலத்தான் காட்சி - இங்கு
திருநீறு சொல்லுதே சாட்சி..
திருமறை கதீதுகள் இல்ல – பல
திருமணம் நடக்குது உள்ளே..

பெட்டையும் பெடியனும் யாரு – அங்கு
போடுறார் கும்மாளம் பாரு..
பெற்றவர் கூட்டித்தான் கொடுக்கார் - இதை
பெருமையாய் எண்ணியே தடுக்கார்..

பைஅத் என்றுதான் சொல்லி – அங்கு
பாவாக்கள் பெண்களைக் கிள்ளி..
பக்தியாய் தடவுகிறார் மேனி – பலர்
பணிவுடன் நிற்கிறார் கூணி

கபுறடியில் நடக்கின்ற கூத்து – பெரு
காமடி சொன்னாலே பார்த்து
கையேந்தி நிற்கிறார் கபுறில் - அவர்
காலமெல்லாம் வாழ்கிறார் குப்றில்

இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல - இந்த
இடத்துக்கு போகாத புள்ள..
இறைவனை மட்டுமே வணங்கு – நம்
இறைதூதர் சொல்லுக்கு இணங்கு


(கவிதைக்கு பொறுப்பு கவிதை யாக்கியவனே)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா