இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/27/2013

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் வருடாந்த மீளாய்வுக் கூட்டம்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2012ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் சம்பந்தமான வருடாந்த மீளாய்வுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பீ.ஜி. பாலித மஹிபால ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்தி்ட்டங்கள் சம்பந்தமாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
அத்துடன் கல்முனை பிராந்தியத்திலுள்ள சிறந்த உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராசா, மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் பீ.கே. குணாளன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா