இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/07/2013

சவூதி அரேபியாவில் கடும் புழுதிக் காற்று

டந்த சில தினங்களாக சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத் மற்றும் கிழக்கு நகரமான தம்மாம் நகரில் கடும் புழுதிப் புயல் வீசுகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கட்டட மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சில கம்பனிகளின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாகவும் அடுத்து வரும் சில தினங்களில் கடும் சூடு ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புழுதிப் புயலினால் ரியாத் மற்றும் தம்மாம் நகரில் இன்று பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. சில பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா