இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/09/2013

மியன்மார் முஸ்லிம் அகதிகள் இந்தோனேஷிய கடலில் மீட்பு

சுமத்ரா கடற்பகுதியில் மீட்கப்பட்ட படகொன்றிலிருந்த 74 மியன்மார் ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளை இந்தோனேஷிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தோனேஷிய மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் தத்தலித்துக் கொண்டிருந்த இந்த படகை மீட்டுள்ளனர். இந்த அகதிகள் எங்கு பயணிக்கிறார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் அளிக்கப்படவில்லை. எனினும் இவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் படகு மூலம் மியன்மாரிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகள் மீட்கப்படும் போது இவர்களது படகில் உணவு மற்றும் பயணத்திற்கு தேவையான எண்ணெய் எதுவும் இல்லாமல் இருந்ததாக இத்தோனேஷிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 74 முஸ்லிம் அகதிகளில் 5 சிறுவர்கள் மற்றும் 5 பெண்களும் அடங்குவதாக பசார் பகுதிக்கான பொலிஸ் பிரதானி ஜாஜுலி குறிப்பிட்டார். 

மியன்மாரில் முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையிலான மதக் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வெளியேறி வருகின்றனர்.
Bas TN

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா