இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/24/2013

ஜனவரி வரை மின் கட்டணத்தில் எந்த மாற்றமுமில்லை :கெஹெலிய


எதிர்வரும் ஜனவரி மாதம் வரைக்கும் தற்போதைய மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைமுறையில் உள்ள மின்கட்டண அதிகரிப்பானது குறைந்தது 2 வருடங்களாக ஆரய்ந்தே மேற்கொள்ளப்பட்டதொன்று. அதைவிடுத்து அதற்கு தனியொருவர் முழுப்பொறுப்பையும் ஏற்க முடியாது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் உலக வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே இந்த மின் கட்டண உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் வரைக்கும் மின்கட்டணத்தில் மாற்றங்களோ அல்லது சலுகைகளோ இடம்பெறாது. நுரைச்சோலை மின் நிலைய பணிகள் சீரானதும் மக்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

நுரைச்சோலை மின் நிலையம் 25 தடவைகளுக்கு மேல் தடைப்பட்டதாக செல்லப்படுகின்றது. இது பொய்யான தகவல். குறைந்தது 15 தடவைகள் தடைப்பட்டிருக்கலாம். மூன்று வருடங்களாவது அதனுடைய உச்ச பயனைப்பெற பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அக்காலப் பகுதியில் குறித்த மின்சாரத் தடைகள் ஏற்படுமென அதனை நிர்மாணித்த பொறியியலாளர் தெரிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
BAS VI

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா