இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/24/2013

ஈ - கல்வி மையக்கட்டிடத் திறப்பு விழா Photos


(ஹனீபா)
நகர்புரப் பாடசாலை மாணவர்கள் அனுபவித்து வருகின்ற சகல வசதி வாய்ப்புக்களையும் கிரமப்புரப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தூர நோக்கு சிந்தனை மூலம்; நாட்டின் பல பிரதேசங்களிலும் ஈ - கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

2013 தேசத்துக்குதுக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈ - கல்வி மையக்கட்டிடத் திறப்பு விழாவில் இன்று (23)  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் உலக தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் எமது மாணவர்களை வளப்படுத்தம் ஒருபாரிய பணியாக இந்த கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டில் கடந்த 30 வருடகாமாக நிலவிய ஆசாதாரன சூழ் நிலையினால் இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் பல சிரமங்கள் காணப்பட்டது.
தற்போது அந்த நிலை எமது ஜனாதிபதி அவர்களின் அற்பணிப்பான சேவையினூடாக இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ வழிசமைக்கப்பட்டிருப்பதுடன் பிரதேசங்கள் அனைத்தும் பலவழிகளிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

2013ம் வருட தயட்ட கிருள வேலைத்திட்டத்துக்காக 15ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதக்கப்பட்டன அவற்றைக் கொண்ட பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன இன்னும் முன்னெடுக்கப்பட்ட வரகின்றன.

தயடகிருள வேலைத்திட்டம் நிறைவடைந்ததும் அமைச்சர் ஓடி விடுவார் என்று விமர்சித்தனர் நாங்கள் ஒரு போதும் ஓடி ஒளிப்பவர்கள் அல்ல மக்களுக்கு எப்போதும் நல்லவற்றை செய்து கொண்டிருப்போம்.

இந்த வகையிலேதான நான் இங்கு வருகை தந்து இப்பிரதேச மாணவர்களின் ஈ - கல்வி நிலையத்தை திறந்து வைக்கக் கிடைத்தள்ளது அதே போன்று இன்னும் பல நிலையங்கள் எமது அமைச்சினால் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் கௌரவ அதிதிகளாக சிரேஷ;ட அமைச்சர் பீ.தயாரத்ன, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திருமதி சிரியாணி விஜேய விக்ரம, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் தீ அல்வீஸ், அமைச்சின் செயலாளர் குணசேகர, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக்க கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா