இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/17/2013

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி


மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கான சூத்திரத்தினை இலங்கை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்தது. 

இதனையடுத்து சில திருத்தங்களுடன் மின் கட்டண உயர்வுக்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதனால் ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து மின் கட்டணத்தினை அதிகரிக்கவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை முன்வைக்கும் மின் கட்டண உயர்வுக்கான சூத்திரம் நியாயமானதாக இல்லாதுவிடின் மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் இயக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா