இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/19/2013

சம்மாந்துறையில் புத்தாண்டு விளையாட்டு விழா


(ஹனீபா)
2013ம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை கௌரவிக்கும் வகையில் சம்மாந்துறை அஸ்ஸிறாஜ் சமுர்த்தி வங்கி மற்றும் சம்மாந்துறை சமுர்த்தி வலயம்-ஏ என்பன இணைந்து நடாத்தும் புத்தாண்டு விளையாட்டு விழா இன்று (20) சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஜினேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்து கொள்ளவுள்ளார் கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்தல்லத்தீப், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, கணக்காளர் எ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல.ஹம்சார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விளையாட்டு விழாவில் பல்வேறு வேடிக்கை வினோத விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளதுடன் புத்தாண்டு குமரன் தெரிவும் இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா