(ஹனீபா,நளீம்)
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சமுர்த்தி அதிகார என்பன இணைந்துமக்களின் காலடியில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் திவிநெகும புத்தாண்டு சந்தைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கான புத்தாண்டு சந்தை நேற்று (11) மல்வத்தை விபுலானந்தா மகாவித்தியாலய வளாகத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த புத்தாண்டு சந்தையில் 65 வியாபார நிருவனங்களும் 03 அரச நிருவனங்களும் கலந்து கொண்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு இவ்வைபவத்தின்போது சமுர்த்தி வங்கிகளினுடாக நிவாரணக் கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் திவிநெகும விவசாய வேலைத்திட்டத்தை சிறப்பாக மேற்கொண்ட பலர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டனர் மேலும் இங்கு இலவசமாக பழமரக்கன்றுகள், உயர்தர மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பரிசில் காசோலை என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் கடந்த வருடம் புத்தாண்டு சேமிப்புக்களை கூடுதலாக சேமித்த குடும்பங்களுக்காக மேற் கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு திவிநெகுமவுக்கு சக்தி எனும் லாஞ்சனை பொறிக்கப்பட்ட குடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இவ்வைபவத்தில் அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், அம்பாறை மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையானர் அனுறுத்த பியதாச,ஜனாதிபதி கூட்டினைப்பு உத்தியோகத்தர் எம்.ரீ.கரீம்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.சகாதேவராஜா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, பிரதேச சபை உறுப்பினர் தியாகரன், உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment