இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/12/2013

புலமைப்பரிசில் சித்தியடைந்தமாணவர்கள், விருது வழங்கி கௌரவிப்பு

(ஹனீபா)
கண்டி மலையக கலை கலாசார பேரவையினால் மறைந்த பிரபல பாடகர்களான ஏ.எம்.ராஜா ஜிக்கி ஆகியோர்களின் ஞாபகாத்தமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலை,இலக்கிய மற்றும் சமூக சேவையாளர்கள் அத்துடன் புலமைப்பரிசில் சித்தியடைந்தமாணவர்கள் ஆகியோர்களை விருது வழங்கிக் பாராட்டிக்  கௌரவிக்கும்; நிகழ்வு (07.04.2013) மாலை சம்மாந்துறை எம்.ஏ.அப்தல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக சேவையாளர் எம்.ஐ.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கல்முனைப் பிரதேச செயலாளர் எழுத்தாளர் எம்.எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக மலையக கலை கலாசார பேரவையின் ஸ்தாபக தலைவர் ராஜா ஜோன்கின்ஸ், அமைப்பின் செயலாளர் வேலுப்பிள்ளை சன்முக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு காமிணி பொன்சேகா ஞாபகாத்த நினைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் கலை, இலக்கிய மற்றும் சமூக சேவையாளர்களுக்கு நினைவுச் சின்னம் மாற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா