இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/05/2013

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு Photos

(ஹனீபா)
மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் ஏற்பாடில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும்; பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மர நடுகையும்  (04.04.2013) சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

'இன்று மரக்கன்றுகளை நடுவோம் - நாளை பயனை அடைவோம்' எனும் திட்டத்தின் கீழ் அதிபர் எஸ்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் கலந்து கொண்டார், அதிதிகளாக உதவி அதிபர் ஏ.எல். அலியார், சாரணிய ஆணையாளர் யூ.எம்.முஸ்தபா உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ,தென்னைப் பயிர்செய்கை சபை என்பவற்றின் மூலம் நடை முறைப்படத்தப்படும் 'கப்ருக திரிய வேலைத்திட்டத்தின் கப்ருக சிப்நென' மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தென்னை மரக் கன்றுகளும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா